முன்னாள் அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட ஐம்பது குடியிருப்புகளில் 14 குடியிருப்புகள் மாத்திரம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வீடுகளை கையளிக்கும் பணிகள் மந்தகதியில் இடம்பெற்று வருவதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், நீதித்துறை, மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே குடியிருப்புகளை ஒப்படைக்க தவறிய முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குடியிருப்புகளை வழங்குவது தொடர்பில் மீளாய்வு
ஜனாதிபதி நியமனம் மற்றும் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் தமது உத்தியோகபூர்வ குடியிருப்புகளை ஒப்படைக்குமாறு அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.
இதேவேளை, எதிர்காலத்தில் அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ குடியிருப்புகளை வழங்குவது தொடர்பில் மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
You may like this....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri