இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
இலங்கையின் கடற்றொழிலாளர்கள் நடப்பு நாட்களில் தொழிலுக்காக அரபிக்கடலுக்குச்
செல்ல வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் இலங்கையில்
உள்ள கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (16) அரபிக்கடலில் ஈரானிய கடற்றொழில் படகை ஆயுதமேந்திய சோமாலிய குழு கடத்திய சம்பவம் தொடர்பான செய்திகளின் பின்னரே இந்த அறிவிப்பு வந்துள்ளது.
விடுக்கப்பட்ட கோரிக்கை
இந்த நிலையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பணிப்பாளர் சுசந்த கஹவத்த, ஈரானிய கப்பலுடன் தொடர்புடைய கடற்பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர் குழுவொன்று தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே இலங்கையின் கடற்றொழிலாளர்கள் குறித்த பிரதேசத்தை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று சுசந்த கஹவத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
