ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவிப்பு
கபுலுமுல்ல ரஜமஹா பத்தினி ஆலயத்தில் வருடாந்த எசல பெரஹெர நடைபெறுவதால் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பெரஹேர நாளை (26) இரவு 8 மணி முதல் வீதி உலா வர உள்ளது.
அதன்படி, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மாற்று வீதிகள்
ஹட்டனில் இருந்து அவிசாவளை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் யட்டியாந்தோட்டை நவட சந்திக்கு வலது பக்கத்தில் பருஸ்ஸெல்ல, பனாபிடிய வீதியின் வராவல சந்தி வரை பயணித்து வராவல சந்தியில் இடது பக்கமாக உள்ள கேகாலை அவிசாவளை பிரதான வீதியில், கரவனெல்லை வரை பயணித்து பிரதான வீதியின் ஊடாக அவிசாவளை நோக்கி பயணிக்க முடியும்.
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கரவனெல்லை சந்தியில் இடது பக்கமாக உள்ள கேகாலை அவிசாவளை பிரதான வீதியின் ஊடாக வராவல சந்திக்கு பயணித்து வலது பக்கமாக புளத்கொஹுபிடிய வீதியின் பனாபிடிய சந்தியில் வலது பக்கமாக திரும்பி ஹப்புகம்மன பருஸ்ஸெல்ல வீதியின் நவட சந்தி வரை பயணித்து பிரதான வீதிக்கு பிரவேசித்து ஹட்டன் வரை பயணிக்க முடியும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri