இலங்கையர்களுக்கு வாக்காளர் பட்டியல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
2026ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் பதிவு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத அல்லது முகவரி, பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றில் திருத்தங்கள் காணப்படுகின்ற 01.02.2009 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த நபர்கள் அது குறித்து தமது கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் விசாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விபரங்கள் பதிவு
எனவே பதிவுச்செயல்முறைக்கு முன்னர், தங்களது விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தங்கள் பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தரை சந்தித்து, உரிய திருத்தங்களை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல், தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்றும் தங்களது விபரங்கள் சரியானவையா என்பதை பரிசீலித்துப் பார்க்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan