ஜப்பானில் பரவும் பக்டீரியா குறித்து இலங்கையர்களுக்கான அறிவிப்பு!
ஜப்பானில் பரவி வரும் அரிய பக்டீரியா தொற்று தொடர்பில் நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தலைவர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சின் பதில் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் பரவி வருவதாக கூறப்படும் தசையை உண்ணக்கூடிய பக்டீரியா தொடர்பில் ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது சாதாரண மக்களிடையே பரவி வரும் ஒரு பக்டீரியா நிலை என்று அவர் கூறுகின்றார்.
நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எதிர்க்கும் பக்டீரியா
ஆனால் இது அரிதாகவே ஒரு அபாயகரமான நிலைக்கு வழிவகுக்கும் மற்றும் இதை ஆண்டிபயாடிக் மூலம் மாற்றும் திறன் உள்ளது.இது அரிதான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எதிர்க்கும் பக்டீரியாக்களாக இருக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனை முழுமையாக குணப்படுத்தக் கூடிய சிகிச்சை முறைகள் உள்ளன. எனவே இது தொடர்பில் தேவையற்ற வகையில் அச்சமடையத் தேவையில்லை என தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
