பிரான்சும் ஜேர்மனியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பு
எத்தியோப்பியாவில் ரீக்றே பிராந்திய கிளர்ச்சியாளர்களுக்கும், எத்தியோப்பிய அரச படையினருக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள தமது நாட்டுப்பிரஜைகள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு பிரான்சும்,ஜேர்மனியும் அறிவுறுத்தியுள்ளன.
எத்தியோப்பியா பாதுகாப்பதற்கான இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் தமது நாட்டுப் படையினரைத் தாமே வழிநடத்தப் போவதாகவும் பிரதமர் அபி அஹமட் கூறியுள்ளார்.
இந்நிலையிலேயே எத்தியோப்பியாவிலிருந்து தாமதமின்றி வெளியேறுமாறு பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் எத்தியோப்பியாவில் உள்ள தமது நாட்டுப் பிரஜைகளை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
