வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு
கொரிய மொழிப்பரீட்சை தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.
கொரிய மொழிப் பரீட்சை (9 -1 புள்ளி முறை பரீட்சை) தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்களை அறிந்துகொள்ள பின்வரும் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு (www.slbfe.lk) பிரவேசிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
விபரங்கள்
1. பெறுபேறுகளை வழங்குதல் : 2024.09.09
2. திறன் தேர்வு (Competency Test ) மற்றும் தகுதிப் பரீட்சை (Skills Test) தொடர்பான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுதல் : 2024.09.12
3. திறன் பரீட்சைக்கான திகதிகள் மற்றம் நேரங்களை அறிந்துக் கொள்ளல்: 2024.09.25
தகுதிப் பரீட்சை மற்றும் திறன் பரீட்சை பின்வரும் திகதிகளில் இடம்பெறும்.
* திறன் பரீட்சை (Competency Test ) : 2024.09.18 முதல் 2024.09.20 வரை
* தகுதிப் பரிட்சை (Skills Test) : 2024.10.03 முதல் 2024.10.11 வரை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri