அடுத்துவரும் நாட்களில் தடைப்படும் நீர் விநியோகம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, அடுத்துவரும் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு நாளைக்கு சில மணிநேரங்களுக்கு மட்டுமே நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தலைவர் சந்தன பண்டாரா தெரிவித்துள்ளார்.
நீர் விநியோகம் தடை
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நீர் வெட்டு நடவடிக்கையை நடைமுறைபடுத்தவில்லை என்றாலும், நிலவும் வானிலை காரணமாக எதிர்காலத்தில் நாள் முழுவதும் நீர் விநியோகம் செய்வது கடினமாக இருக்கும் என்று மேலும் கூறியுள்ளார்.

அம்பத்தலே உள்ளிட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தித் திறன் இதுவரை பாதிக்கப்படவில்லை என்றாலும், மலைப்பகுதிகளுக்கான நீர் விநியோகத்தில் அழுத்தம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
எதிர்காலத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், எனவே தற்போதுள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், குறைந்த அழுத்தத்தில் நீர் பெறும் பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் நீர் விநியோகம் செய்ய தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.