இலங்கையை வந்தடையவுள்ள எரிபொருள் கப்பல்கள்! கையிருப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
அடுத்த மாதம் 10 எரிபொருள் கப்பல்கள் நாட்டிற்கு வரவிருப்பதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (சிபிசி) தெரிவித்துள்ளது.
நாட்டில் எரிபொருள் விநியோகம் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி எதிர்காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவிடமிருந்து மற்றுமொரு அவசர உதவி : 36 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளுடன் கொழும்புக்கு வந்த கப்பல்
மின்சார உற்பத்தி
மின்சார உற்பத்திக்கு அத்தியாவசியமான எரிபொருள் எண்ணெயின் விநியோகம் ஏற்கனவே சீராக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்பட வேண்டிய அவசியம் இருக்காது என்று வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்படுவதோடு, எரிபொருள் எண்ணெய்க்கான ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தேவையான விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மின்சார உற்பத்திக்குத் தேவையான 30,000 மெட்ரிக் டொன் எரிபொருள் எண்ணெயை ஏற்றி வரும் கப்பல், ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நாட்டிற்கு வரவுள்ளது.
எரிபொருள் கையிருப்பு
தற்போதுள்ள கையிருப்புகளின்படி, அடுத்த மாதத்தின் நடுப்பகுதி வரை டீசல் விநியோகத்தையும், ஜூன் மாதத் தொடக்கம் வரை 92 மற்றும் 95 பெட்ரோல் விநியோகத்தையும் எந்தப் பிரச்சினையுமின்றித் தொடர முடியும் என்று மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான முழு எரிபொருள் இருப்பும் நாட்டிற்கு எவ்வித இடையூறும் இன்றி வந்து சேரும் என்றும், எரிபொருள் விநியோகச் சங்கிலியில் எந்த இடையூறும் ஏற்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உறுதியளித்துள்ளார்.