இலங்கையிலுள்ள பல வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள விசேட அறிவிப்பு
இலங்கையிலுள்ள பல வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வழங்கியுள்ளன.
எரிபொருள் நெருக்கடி
அத்துடன் ஏனைய அனைத்து துறையினரும் வீடுகளில் இருந்து பணியாற்றுவதன் மூலம் இந்த எரிபொருள் நெருக்கடியை தீர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும், இல்லையெனில் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் வசமுள்ள எரிபொருளை பங்கீடு செய்வதில் சிக்கல் நிலை ஏற்படும்.
இந்த நிலையிலேயே எதிர்வரும் 10ஆம் திகதிவரை அத்தியவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏனைய செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
அத்துடன் இதற்காக ஏனைய துறையினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் எங்களுக்கு பொருந்தாது, அனைத்து வாகனங்களுக்கும் பற்றுச்சீட்டு முறை மூலம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என லங்கா ஐஓசி தெரிவித்திருந்தது.
வங்கிகளின் அறிவிப்பு
இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையிலேயே வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பில் பல வங்கிகள் அறிவிப்புக்களை விடுத்துள்ளன.
அதன்படி நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில வர்த்தக வங்கிக் கிளைகள் பரிவர்த்தனைகளுக்கான திறக்கும் நேரத்தை மாற்றியமைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை முடிந்தளவு இணையவழியில் வங்கி பரிவர்த்தனை (Digital or Internet Banking) நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
