இலங்கையில் இருக்கும் இஸ்ரேலியர்கள்! பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு
சுற்றுலாப் பயணியாக அல்லது வேறு நோக்கங்களுக்காக இலங்கைக்கு வருகை தரும் இஸ்ரேலிய பிரஜைகளுக்காக இலங்கை பொலிஸார் விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அவர்களது தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலக்கம்
ஏதேனும், பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு தேவைகள் இருப்பின் குறித்த இலக்கத்தின் ஊடாக இஸ்ரேலியப் பிரஜைகள் நேரடியாக அழைத்து தெரிவிக்க முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
071-8592651 என்ற தொலைபேசி இலக்கம் இதற்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கமானது, சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீக்கு உரித்துடையது என்றும், இந்த இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் உங்களது தேவையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தகவல் வழங்கும் போது அடையாளத்தை உறுதிப்படுத்துவது அவசியம் என்பதால் தேவையான தகவல்களை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
