யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை உண்மை! சமாதானம் மலரவில்லை - த.சித்தார்த்தன்

covid Parliament President T. Siddharthan
By Independent Writer Jan 19, 2022 11:16 PM GMT
Report

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக எதுவுமே கூறப்படவில்லை, அத்துடன் வடக்கு, கிழக்க மக்கள் பிரதிநிதிகள் தமது கொள்கைகளை ஓரங்கட்டிவிட்டு தனது செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,  

எமது கொள்கைகள் என்பது எமது மக்களின் அபிலாசைகளை சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு என்பதனை தெளிவாக கூறிவந்திருக்கின்றார்கள். அதனை ஓரங்கட்டிவிட்டு அபிவிருத்தி செய்வதில் எந்த பயனுமில்லை.

தற்போது இந்த நாட்டில் பெருளாதார பின்னடைவுக்கு கோவிட் காரணமாக உள்ளது. இதனை நாங்கள் மறுக்க முடியாது. அதனை விட முக்கியமாக எமது மக்களின் இனப்பிரச்சினையும், அதனால் ஏற்பட்ட யுத்தம் மற்றும் இழப்புக்களும் எமது பிரச்சினைக்குத் தீர்வை எட்டாது நாடு நிலைபேறான அபிவிருத்தியை அடைய முடியாது.

எனவே நியாயமான தீர்வை காணுவதை தான் முக்கியமானதாக கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் உரையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சமாதானம் மலர்ந்ததாக கூறியிருந்தார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது உண்மை ஆனால் சமாதானம் மலரவில்லை. யுத்தம் ஆரம்பித்ததற்கான காணிகள் அதே நிலையில் தான் உள்ளது. அந்த காணிகளுக்கு சரியான தீர்வு கொண்டு வராமல் சமாதனம் மலர்ந்ததாக கூறமுடியாது.

யுத்தம் மிகப்பெரிய அழிவை எமது பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளது. இதனை நிவர்த்தி செய்ய பாரிய அபிவிருத்திகளை எமது பகுதிகளில் செய்ய வேண்டியுள்ளது. இதனை கொழுப்பில் இருந்து திட்டமிடுவதனுடாக அந்த அபிவிருத்தி எமது மக்களுக்கு பயனைப் பெற்றுக் கொடுக்க முடியாது.

முக்கியமாக அந்த மக்களின் பங்களிப்புடனும், அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகளுடனும் அங்கிருக்கின்ற நிலைமைகளை புரிந்து செயற்பட வேண்டும்.

ஆகவே தான் எங்களுடைய பகுதிகளில் எமது மக்கள் தங்களின் அலுவல்களை தாங்களே பார்க்ககூடிய அளவிலான சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வுதான் இன்று இருக்ககூடிய ஒன்று.

இலங்கையின் அரசியலமைப்பில் 13ஆம் திருத்தச்சட்டம் உள்ளது அது இலங்கை - இந்திய உடன்படிக்கையூடாக ஏற்படுத்தப்பட்டது. இந்த நாட்டில் உள்ள அரசியல் அமைப்பில் உள்ள விடையத்தை முழுமையாக அமுல்படுத்தாமலும், அமுல்படுத்த தயங்கும் ஒரு நாடு இலங்கையாகத்தான் இருக்கும்.

13ஆம் திருத்ததில் எமது பிரச்சினைகளுக்கான தீர்வு இல்லா விட்டாளும் நாங்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்வதற்கான நியாயம் இதில் இருக்கின்ற பல விடயங்களை மத்திய அரசு மீளப்பெற்று வருகின்றது.

வைத்தியசாலைகளை தேசிய வைத்தியசாலைகளாகவும், பாடசாலைகளை தேசிய பாடசாகைளாகவும் மத்தியரசுக்கு கீழ் கொண்டு செல்கின்றது. அத்துடன் 13ஆம் திருத்தை முழுமையாக அகற்றுவதற்கு அரசில் உள்ள பல சிங்களத் தலைவர்கள் விரும்புகின்றார்கள் என்பது எங்களுக்கு புரிகின்றது.

இதனால் தான் நாங்கள் 13ஆம் திருத்ததின் பங்காளியான இந்தியாவை கேட்கின்றோம். ஓப்பந்தத்தை தயாரிக்கும் போது கூட இது எமக்கான தீர்வாக அமையாது என வலியுறுத்தியிருந்தோம். 13ஆம் திருத்தம் முழுமையாக இல்லாது செய்யப்பட்டால் நாங்கள் மீண்டும் பூச்சிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.

முழுமையான சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு வரும் வரைக்கும் 13ஆம் திருத்தம் முழுமையாக அழுல்படுத்த வேண்டும் என இந்தியாவை கேட்பதற்கு நாட்டை ஆண்ட, ஆழுகின்ற அரசுகள் தான் காரணம்.

இந்த அரசை பொறுத்தவரைக்கும் கோவிட்டினை கட்டுப்படுத்துவதில் மிகவும் கடுமையாக உழைத்து வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் 85 வீதமான மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது.

இதன் மூலம் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதுடன் மரணங்களையும் கட்டுப்படுத்தியுள்ளது. இதற்காக இந்த அரசுக்கு பாராட்டுக்கள். அதே போல புதிய அரசியல் அமைப்பையும் கொண்டு வருவதனுடாக எமக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் முயற்சிக்க வேண்டும்.   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US