அர்ஜூன அலோசியஸ் மீது மற்றுமொரு வழக்கு தாக்கல்
வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் 6 மாத சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள டபிள்யூ.எம்.மென்டிஸ் அன்ட் கம்பனியின் பணிப்பாளர் அர்ஜுன அலோசியஸ் ( Arjuna Aloysius) இற்கு எதிராக மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செய்தித்தாள் அச்சிடுவதற்கான காகிதங்களை வாங்கியதன் மூலம் 12 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக கூறி, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
12 மில்லியன் ரூபா மோசடி
செய்தித்தாள்களை அச்சிடுவதற்கான காகிதத்தை இறக்குமதி செய்து விநியோகம் செய்யும், நெப்டியூன் பேப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் தாக்கல் செய்த இந்த வழக்கில், அர்ஜுன அலோசியஸ் மற்றும் சமிந்த சஹான் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பிரதிவாதிகளின் வங்கிக் கணக்குகளில் போதிய பணம் இல்லாதபோதும், 2019 ஆம் ஆண்டில் தனித்தனி சந்தர்ப்பங்களில் நான்கு காசோலைகளை வழங்கியதன் மூலம் 12 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக தெரிவித்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்சன கெக்குனுவல முன்னிலையில் இன்று (27) விசாரணைக்கு வந்தது.
8 இலட்சம் ரூபா சரீரப் பிணை
இதன்போது, அர்ஜுன அலோசியஸ் சிறைச்சாலை நிர்வாகத்தினால், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது பிரதிவாதி நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
இந்தநிலையில் இரண்டு தரப்பினரும் முன்வைத்த வாதப்பிரதிவாதங்களை பரிசீலித்த நீதவான், பிரதிவாதிக்கு 8 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையை வழங்கினார்.
அத்துடன், நீதிமன்றத்தில் முன்னிலையாகாத இரண்டாவது பிரதிவாதியை மார்ச் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
