அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்கப் போவதில்லை: இஸ்ரேல் அதிரடி
காசா மற்றும் ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்கப் போவதில்லை என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) கூறியுள்ளார்.
இஸ்ரேலின் நெகேவ் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஈரான் மற்றும் லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக நடந்து வரும் போர்களில் அமெரிக்காவின் ஆதரவைப் பாராட்டுவதாகவும் அமெரிக்க கோரிக்கைகளுக்கும் இணங்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
எளிமையான கொள்கை
மேலும் எமது கொள்கை எளிமையானது. அது சாத்தியமாகும்வரை தாக்குதலை நகர்த்த தயாராகவுள்ளோம்.
ஹமாஸ் இனி காஸாவைக் கட்டுப்படுத்தாது, ஹிஸ்புல்லா எங்கள் வடக்கு எல்லையில் குடியேறக்கூடாது.
இதுவே எங்கள் நிலைப்பாடு. சிரியாவில் இருந்து ஆயுத பரிமாற்றம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரானில் இருந்து சிரியா வழியாக ஹிஸ்புல்லாவிற்கும் அங்கிருந்து லெபனானுக்குமான ஆயுத விநியோகச் சங்கிலிகளையும் நாங்கள் தடுத்துள்ளோம்" என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |