புதிய சொகுசு வாகனங்களை ஏற்க போவதில்லை – ஐக்கிய மக்கள் சக்தி
புதிய சொகுசு வானங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்ய உள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சஜித் பிரமேதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இந்த வாகனக் கொள்வனவிற்காக பயன்படுத்தப்படும் பணத்தை நாட்டு மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்காக பயன்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்யும் திட்டத்தை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பணத்தைக் கொண்டு அரசியல்வாதிகள் நலன்களை அனுபவிப்பதனை எதிர்ப்பதாகவும் அதில் உடன்பாடில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு செலவிடப்படும் நிதி நாட்டின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
