சமையல் எரிவாயுவின் தரத்தை பரிசோதனை செய்ய போதிய வசதிகள் கிடையாது
இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடம், சமையல் எரிவாயுவின் தரத்தைப் பரிசோதனை செய்வதற்கு போதுமான வசதிகள் கிடையாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு தொடர்பிலான உரிய தர நிர்ணயங்கள் இன்னும் வகுக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.
வெற்று சிலிண்டர்கள், சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டருடன் தொடர்புடைய ஹோர்ஸ், ரெகுலெட்டர் உள்ளிட்ட பாகங்களையே இதுவரையில் தர நிர்ணயம் செய்து வருவதாக இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் சுனந்த பெர்னாண்டோ ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
தர நிர்ணயம் தொடர்பில் புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமையல் எரிவாயு தொடர்பில் பரிசோதனை செய்வதற்குப் போதியளவு சாதனங்களும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பரிசோதனைகளை செய்வதற்கு அதி நவீன ஆய்வுகூட வசதிகள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.