அரசியல் கூட்டணி தொடர்பில் ஜானக ரத்நாயக்கவின் நிலைப்பாடு
நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் யாரையும் இணைத்து அரசியல் கூட்டணி அமைப்பதில்லை என்று தாமும், அனைத்து சிவில் அமைப்புகளும் தீர்மானித்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய சிவில் அமைப்பு முன்னணியுடன் நேற்று (10.02.2024) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எம்.பிக்களை நிராகரித்துள்ள மக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை பொது மக்கள் நிராகரித்துள்ளனர். எனவே அதில் ஒரு அங்கமாக இருக்க நான் விரும்பவில்லை.

தற்போது, சிவில் அமைப்புகள் நாட்டை வீழ்ச்சியடைந்த இடத்தில் இருந்து மீட்க ஒரு பெரிய தேசிய பணியை மேற்கொண்டு வருகின்றன. இந்த பணிக்கு நாங்கள் 'மீட்பு சிறிலங்கா' என்று பெயரிட்டோம்.
மறுக்கப்பட வேண்டிய வாய்ப்பு
எனவே நாட்டை உயர்த்துவதற்கும், ஒரு சிறந்த தலைவரை உருவாக்குவதற்கு பொருத்தமான சூழலை உருவாக்குவதற்கும் பொதுமக்கள் சிவில் அமைப்புகளுடன் கைகோர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தற்போதைய ஆளும் கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு மற்றொரு வாய்ப்பை வழங்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri