பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம், சமூக ஊடகங்களை தவறாக கையாளுபவர்களுக்கு பிரச்சினையாக அமையும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் .
பாணந்துறையில் இன்று (10.02.2024) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவதூறு பரப்புதல்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“சமூக வலைதளங்களில் எங்களை, அரசாங்கத்தை, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அனைவர் தொடர்பிலும் அவதூறு பரப்புகின்றனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கையில் 400,000 ரூபா பணம் இருந்தது.
குறித்த நபர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி எங்களை அவதூறாக பேசுபவர். இவ்வாறு அவதூறாக பேசும்படி அரசியல்வாதி ஒருவர் தான் பணத்தை கொடுத்துள்ளார்.
பிரச்சினை
இந்நிலையில் சந்தேகநபர் காரில் கொழும்பு சென்று டொலர்களை ரூபாயாக மாற்றிய போது கைது செய்யப்பட்டார். எதிர்காலத்தில் அந்த அரசியல்வாதியின் பெயரை வௌிப்படுத்துவேன்.
இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக தான் இந்த நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.
இந்த சட்டம், சமூக ஊடகங்களை தவறாக கையாளுபவர்களுக்கு பிரச்சினையாக அமையும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
