நோர்வே நாட்டின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் (Photos)
நோர்வே நாட்டின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டிரைன் ஜோரான்லி எஸ்கெடல் (Trine Joranli Eskedal) மன்னாருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அவர் இன்று காலை 8.45 மணி அளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெலுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது தூதுவர் வரவேற்கப்பட்டு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் மற்றும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மன்னாருக்கு வருகை தந்த நோர்வே தூதுவர் மன்னாரில் இடம் பெறும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தார்.
தொடர்ந்து மன்னாரில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைகள் குறித்தும் அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார்.
மன்னார் மாவட்டத்தில் பெண்கள் அபிவிருத்தி தொடர்பாகத் தான் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளதுடன் மாவட்ட பெண்களின் நிலை குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
மேலும் மன்னார் பகுதிகளில் இந்திய மீனவர்களின் பிரச்சினை, பறவைகள் சரணாலயம்,
காற்றாலை மின்சாரம், கழிவு மீன் திரவ உரம் தயாரிப்பு, மன்னார் மாவட்ட பொது
வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் அரசாங்க அதிபரிடம்
கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam