இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க விருப்பம் வெளியிட்டுள்ள நோர்வே
நோர்வே தூதுவர் ட்ரைன் ஜரான்லி எஸ்கெடல் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்ததாக இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது இலங்கையில் நோர்வே முதலீடுகளை அதிகரிப்பதற்கான வழிகள், கோவிட் தொற்று நோயால் ஏற்படும் பொருளாதார சவால்கள் மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில் பொருளாதார மீட்புக்கான வழிகள் குறித்து கவனம் செலுத்தபட்டுள்ளது.
கோவிட் சூழ்நிலைக்கு பின்னர் சுற்றுலாத்துறையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்ற நம்பிக்கையும் வெளியிடப்பட்டது.
அத்துடன் இலங்கையில், எரிசக்தி முதலீடுகளை அதிகரிப்பதற்கான ஜனாதிபதியின் திட்டங்கள் மற்றும் இதை அடைவதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நோர்வே தூதரகத்தின் துணைத் தலைவர் திருமதி ஹில்ட் பெர்க்-ஹேன்சன் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் மேலதிக செயலாளர் பி.எம்.அம்ஸா உட்பட்டோர் பங்கேற்றனர்.