நோர்வேயில் காணாமல் போன இலங்கை மல்யுத்த அணியின் முகாமையாளர்?
நோர்வேயின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற உலக கிண்ண மல்யுத்த போட்டியில் கலந்துகொண்ட இலங்கை அணியின் முகாமையாளராக செயற்பட்ட டொனால்ட் இந்திரவங்ச,(Donald indrawansa) நோர்வேயில் இருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மல்யுத்த அணி இலங்கை திரும்புவதற்கு முதல் நாள் அவர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அணியின் சார்பில் போட்டியில் கலந்துகொண்ட ஏனைய அனைவரும் நாடு திரும்பியுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி அனுசரணையில் இந்த போட்டியில் கலந்துகொண்ட இலங்கை மல்யுத்த அணியில், வீர, வீரங்கனைகள் 5 பேர் உட்பட 7 பேர் அங்கம் வகித்தனர்.
இந்த அணி கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி இலங்கையில் இருந்து நோர்வே புறப்பட்டுச் சென்றது. உலக கிண்ண மல்யுத்த போட்டி கடந்த மாதம் 2 ஆம் திகித ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.



விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
