கிளிநொச்சியில் நடைபெற்ற வடமாகாண பொங்கல் விழா
வட மாகாண பொங்கல் விழா மாகாண ஆளுநரின் பங்குபற்றலுடன் கிளிநொச்சி பூநகரி பல்லவராயன் கட்டு பகுதியில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(16.01.2024) இடம்பெற்றுள்ளது.
பல்லவராயன் கட்டில் இருந்து புதிர் எடுத்து வரப்பட்டு ஆலயத்தில் பொங்கல் வழிபாடுகளைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
அபிவிருத்தி திட்டங்கள்
இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், பூநகரி பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.
குறிப்பாக சுற்றுலாத்துறை குளங்களை அமைத்தல் போன்ற அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது. அதேவேளை வடக்கு மாகாணத்திலே அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்து ஒரு ஐந்து ஆண்டுக்குரிய திட்டத்தினை தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணித்திருக்கின்றார்.
அதற்கான வேலை திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் த.அகிலன் அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறஞ்சன் மற்றும் வடக்கு மாகாண பதவி நிலை உத்தியோகத்தர்கள் விவசாய பெருமக்கள் பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
