வெளிநாட்டுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு கிடைக்கும் பலன்கள்
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள சுமார் 3 மில்லியன் இலங்கையர்களில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில், 1.2 வீதமானோரே பதிவு செய்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் பதிவுசெய்யாது சட்டவிரோதமாக வெளிநாடு சென்றவர்களே, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் போது, பல்வேறு பாதிப்புகளுக்கு முகங்கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காப்புறுதி பாதுகாப்பு
கண்டியில் மல்வத்து, அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தம்மைப் பதிவுசெய்து வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு காப்புறுதி பாதுகாப்பு கிடைப்பதுடன், பெரும்பாலான பிரதிபலன்களும் உரித்தாகுகின்றன.
சில தரப்பினர் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்படாது தவறான முறைமையின் மூலம் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
இதனால், அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதில் அமைச்சு பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேர்கிறது.
எவ்வாறாயினும் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்குச் சென்று அங்கு பாதிப்புகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டால், அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சு கவனம் செலுத்தும்.
மூன்று மில்லியன் மக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்கள் எதிர்நோக்க நேரும் பாதிப்புகள் சம்பந்தமாக ஆயிரத்திற்கும் குறைவான முறைப்பாடுகளே கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் திரண்ட மக்கள் : களத்தில் மலர் வளையங்களும் சடலம் போன்ற உருவங்களும்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
