புறக்கணிக்கப்படும் வட மாகாண வைத்தியசாலைகள்: தீர்வை பெற்றுத்தருவதாக திலீபன் எம்.பி உறுதி
வட மாகாணத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தீர்வை பெற்றுத்தருவதாகவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.திலீபன் தெரிவித்துள்ளார்.
மன்னார் பொது வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (03.11.2023) விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர், வைத்தியர் யோகேஷ்வரனுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
வரவு செலவுத்திட்டத்தில் தீர்வு
அவர் மேலும் கூறுகையில்,
“வடமாகாணத்தின் வைத்தியசாலைகளில் கட்டிட, ஆளணித்துவ மற்றும் சிகிச்சை உபகரணங்கள் ரீதியாக மன்னார் பொது வைத்தியசாலையே மிகவும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் வளப்பற்றாக்குறைகள் இருந்த போதிலும் வைத்தியர்களால் மக்களுக்கு சிறந்த சேவைகள் வழங்கப்படுகின்றது.
எனினும், நிலவிவரும் குறைபாடுகளுக்கான தீர்வுகளை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் என்னால் பெற்றுத் தர முடியும் என நான் நம்புகின்றேன்.
மேலும் வைத்தியசாலையின் தேவைகளை, நடைபெற இருக்கும் வரவு செலவுத்திட்ட கூட்டங்களின் போது முன்வைத்து, அவற்றை நிறைவேற்றுவேன்” என தெரிவித்திருந்தார்.

ஹமாஸின் இலக்குகளை சில நொடிகளில் அழித்துவிடக்கூடிய இஸ்ரேலின் புதிய கண்டுபிடிப்பு - செய்திகளின் தொகுப்பு


நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
