கொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு :தீவிர பாதுகாப்பில் வைத்தியசாலை
கராப்பிட்டிய வைத்தியசாலையில் சுமார் 06 மாதங்களாக பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு பின்னர் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொரளை பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த ஷாப்டரின் சடலம் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவிற்கமைய, ஐந்து நிபுணர்கள் அடங்கிய சட்ட வைத்திய அதிகாரிகள் குழு முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
அதுவரை மர்மமாக இருந்த அவரது மரணத்தின் சரியான காரணத்தை உறுதிப்படுத்தவே தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் கீழ் மீண்டும் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
கராப்பிட்டிய மருத்துவ பீடத்தின் ஐவரடங்கிய சட்ட வைத்திய அதிகாரிகள் குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தமேற்பட்டதால் மரணம் நிகழ்ந்தது தெரியவந்தது.
கைது செய்ய நடவடிக்கை
இந்த சம்பவத்தின் ஊடாக குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாக தீர்ப்பளித்த நீதவான் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன் பின்னர், தினேஷ் ஷப்டரின் சடலத்தை கராப்பிட்டிய வைத்தியசாலையின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய இன்று அவரது உறவினர்கள் வந்து சடலத்தை ஏற்றுக்கொண்டனர்.
இதனால் கராபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையைச் சுற்றி விசேட பொலிஸ் பாதுகாப்பில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
