வவுனியா அக்போதி மகாவித்தியாலத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்
வவுனியா தெற்கு கல்வி வலயத்திலுள்ள அக்போதி மகாவித்தியாலத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நேற்று (12.03.2025) இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் ஆளுநர் கலந்துரையாடியுள்ளார்.
அபிவிருத்தி உதவி
பாடசாலையில் 2015ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் கட்டுவதற்கு ஆரம்பிக்கப்பட்ட கட்டடம் இன்னமும் நிறைவுறுத்தப்படவில்லை என பாடசாலைச் சமூகத்தால் ஆளுநருக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வேறு அபிவிருத்தி உதவிகளும் கிடைக்கவில்லை எனவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
ஆளுநர் விஜயம்
இது தொடர்பில் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடுவதாக ஆளுநர் இதன்போது பதிலளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் க.பிரட்லி ஜெனட், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் இணைந்திருந்தனர்.








1988-ம் ஆண்டு 10 ரூபாய்க்கு வாங்கிய 30 ரிலையன்ஸ் பங்குகளை கண்டுபிடித்த நபர்.., தற்போது அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri
