யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தில் 11 பேருக்கு நேற்று கோவிட் தொற்று உறுதி
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 8 பேர் உட்பட 11 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 386 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது 11 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 7 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது.
அதுமட்டுமின்றி மல்லாவி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் மூவருக்குத்
தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இவர்கள் மூவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த
இராணுவத்தினராவர்" என தெரிவித்துள்ளார்.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan