ஜனாதிபதியை சந்திக்க தயாராகும் யாழ்.வலிகாமம் வடக்கு மக்கள்
யாழ்.குடாநாட்டில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு 2 ஆயிரத்து 500 குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கில் மயிலிட்டி மற்றும் பலாலியில் உள்ள காணிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
காணிகளில் மீள்குடியேற்றம்

மயிலிட்டி துறைமுகத்தை கடற்றொழில் மக்களின் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்த முடியும். பலாலி பிரதேசத்தை விவசாயத்தில் ஈடுபடும் குடும்பங்கள் பயன்படுத்த முடியும்.
எனினும், அந்த காணிகளை மீள்குடியேற்றத்துக்கு விடுவித்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றத்தின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலம்

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் கூற்றுப்படி, 1990 இல் இலங்கை இராணுவத்தினரால் சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
3 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் உரியவர்களிடம் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் காங்கேசன்துறை, கீரிமலை, வறுத்தலவிளான் மற்றும் கட்டுவன் ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன என்று தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ள 3 ஆயிரம் ஏக்கர் நிலம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து தமது குறைகளை
விளக்குவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan