பல வண்ணங்களில் ஜொலித்த பிரித்தானியா! வியப்பில் ஆழ்ந்த பொதுமக்கள்
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் திங்கட்கிழமை இரவு வானம் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் ஜொலித்த 'வடதுருவ ஒளி' (Northern Lights/Aurora Borealis) நிகழ்வு பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சூரியனில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்புகள் காரணமாக வெளியேற்றப்பட்ட மின்னூட்டம் பெற்ற துகள்கள், பூமியின் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களுடன் மோதியதால் இந்த கண்கவர் வண்ணங்கள் உருவானதாக விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.
வடதுருவ ஒளி
பொதுவாக வடமுனைக்கு அருகிலுள்ள பகுதிகளில் மட்டுமே தென்படும் இந்த அதிசயம், தற்போது சூரியனின் செயல்பாடுகள் (Solar Maximum) உச்சத்தில் இருப்பதால், இங்கிலாந்தின் தெற்குப் பகுதிகள் மட்டுமின்றி இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் வெற்றிகரமாகப் பார்க்கப்பட்டது.
LOOK TO THE NORTHWESTERN SKIES! 💗💚
— GMA Integrated News (@gmanews) January 20, 2026
The aurora borealis, also known as the "northern lights", was visible in northwestern England on Monday, Jan. 19, with shimmering green and pink hues lighting up the night sky in a rare display of the phenomenon usually seen much farther… pic.twitter.com/w9bBEKohTo
குறிப்பாக ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் மிகத் தெளிவாகத் தெரிந்த இந்த ஒளிப்பிழம்புகள், ஹாம்ப்ஷயர் மற்றும் சஃபோல்க் போன்ற இங்கிலாந்தின் தெற்குப் பகுதிகளிலும் தென்பட்டன.
வளிமண்டலத்தில் உள்ள ஒகட்சிசன் அணுக்கள் பச்சை நிறத்தையும், நைதரசன் அணுக்கள் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களையும் உமிழ்கின்றன.
வியப்பில் மக்கள்
2026-ஆம் ஆண்டு சூரியனின் 11 ஆண்டு காலச் சுழற்சியில் அதிக செயல்பாடு கொண்ட ஆண்டாகக் கருதப்படுவதால், வரும் மாதங்களில் இது போன்ற அபூர்வ நிகழ்வுகளைக் காண அதிக வாய்ப்புகள் உள்ளதாக பிபிசி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The Northern Lights - Aurora Borealis at #Haarlem. Its so beautiful!@gemeentehaarlem@NL_Times#noorderlicht pic.twitter.com/Fk8dd4cTSR
— Shivraj Sharma (@shivrajbsharma) January 20, 2026
செவ்வாய்க்கிழமை இரவு மேகமூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஸ்கொட்லாந்து போன்ற ஒரு சில பகுதிகளில் மட்டுமே இதனைத் தொடர்ந்து காண வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.


கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri