சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - வடக்கு ஆளுநர் எச்சரிக்கை
சுகாதார வழிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நேற்றைய அறிக்கையின்படி கோவிட் பரவல் வடக்கில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரச அதிபர்களூடாக மீளாய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, அதனைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளும் அவற்றை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் அறுவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri