அணுஆயுதக் கைவிடல் கோரிக்கைக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு..!
வடகொரியாவின் அணுஆயுதக் குறைப்பு மற்றும் ஒழிப்பு குறித்து ஜி7 (G7) நாடுகள் விடுத்துள்ள கூட்டறிக்கைக்கு, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜோங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜி7 நாடுகளின் இந்தக் கோரிக்கை வடகொரியாவின் அரசியலமைப்பை மீறும் செயல் என்றும், நாட்டின் இறையாண்மையைத் தட்டிப்பறிக்கும் முயற்சி என்றும் அவர் சாடியுள்ளார்.
வாயில் இரத்தக் கறைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது யுவதி! வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள்
வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அணுஆயுத ஒழிப்பு என்பது இனி ஒருபோதும் சாத்தியமில்லாத, முற்றிலும் முடிந்துபோன ஒரு விஷயம் என்றும், அணுஆயுதங்களை வைத்திருப்பது தங்களின் நாட்டின் முதன்மையான முக்கிய உரிமையாகும் என்றும் கிம் யோ ஜோங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எதிரி நாடுகளிடமிருந்து தொடர்ந்து வரும் அணுஆயுத அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே, தற்காப்புத் தடுப்பு அரணாக வடகொரியா இந்த அணுஆயுதங்களை உருவாக்கியுள்ளது என்றும், இது பிராந்திய அமைதியை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியத் தூண் என்றும் அவர் விவரித்துள்ளார்.
மேலும், அணுஆயுத நாட்டின் முக்கிய நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்த நினைப்பவர்கள் தங்களுக்குத் தாங்களே பேரழிவை தேடிக்கொள்கிறார்கள் என்று எச்சரித்த அவர், ஜி7 நாடுகளின் இத்தகைய விவாதங்கள் முற்றிலும் காலாவதியானவை என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக புதன்கிழமை நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், வடகொரியாவின் அணுஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் குறித்து உலகத் தலைவர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்ததுடன், ஐநா பாதுகாப்பு பேரவை தீர்மானங்களின்படி வடகொரியா முழுமையாக அணுஆயுதங்களைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam