வட கொரியாவின் புதிய செயற்கைக்கோள் ஏவுதல் திட்டம் தோல்வி : இடைநடுவே வெடித்து சிதறிய ரொக்கெட்
வடகொரியாவின் (North Korea) புதிய செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ரொக்கெட்டை ஏவுவதற்கான முயற்சி தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன் முதல் கட்ட ரொக்கெட் சோதனையின் போது குறித்த ரொக்கெட் நடுவானில் வெடித்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ரொக்கெட் சோதனை
இதனிடையே தென் கொரிய இராணுவம் நாட்டின் வடமேற்கில் உள்ள டோங்சாங்-ரி பகுதியில் இருந்து மஞ்சள் கடல் மீது தெற்கு நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை இரவு தென்பட்டதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல், ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் சீனப் பிரதமர் லி கியாங் ஆகியோர் சியோலில் முத்தரப்பு உச்சி மாநாட்டை நடத்தி, கொரிய தீபகற்பத்தில் அமைதியை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி இருந்தநிலையில், வட கொரியாவால் செயற்கைக்கோள் ஏந்திச் செல்லும் ரொக்கெட் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
you may like this