சீனா அறிமுகப்படுத்தும் புதிய வகை விசா
சீனா வரும் அக்டோபர் 1 முதல் புதிய K வகை விசாவை (K Visa) அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த புதிய விசா இளம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமைகளைக் கொண்ட வெளிநாட்டு நபர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா விதிகளை தளர்த்தி
சீனாவில் தற்போது உள்ள 12 வகை விசாக்களுடன் ஒப்பிடுகையில், இந்த K விசா அதிகமான நுழைவு அனுமதிகளை வழங்குவதுடன் நீண்ட காலம் செல்லுபடியாகும் தன்மைகளையும் வழங்குகிறது.
China creates a new visa for young STEM talent in national tech drive - K visa.
— ShanghaiPanda (@thinking_panda) August 14, 2025
In my view, China is attracting refugees from the US who have abandoned education there due to slashed funding, ideological turmoil, or harassment of foreign students.🤔 pic.twitter.com/vN8szSjZVe
K விசா பெற்றவர்கள் சீனாவில் கல்வி, கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பரிமாற்றங்களில் ஈடுபடலாம்.
மேலும், வணிக நடவடிக்கைகளிலும் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் இருந்து திறமைசாலிகளை ஈர்க்கும் நோக்கில், சீனா விசா விதிகளை தளர்த்தி வருகிறது.
இதன் பலனாக இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 38.05 மில்லியன் வெளிநாட்டு பயணிகள் சீனாவிற்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
