வீட்டிலிருந்து மூதாட்டியின் சடலம் மீட்பு! மேலதிக விசாரணையில் பொலிஸார்
வீடொன்றில் இருந்து மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை - மிரிஸ்ஸ, உடுபில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று(15) இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மிரிஸ்ஸ, உடுபில பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முதல் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அயல் வீட்டுக்காரர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்துப் பொலிஸாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த வீட்டில் உள்ள கட்டிலுக்கு மேல் இருந்து மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
