வடகொரிய அணுஆயுத விவகாரம்: புதிய அணுகுமுறையை கையில் எடுக்கிறார் ட்ரம்ப்
ஈரானுடன் போடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கவனத்தை இனி வடகொரியாவின் அணுஆயுதத் திட்டங்களின் பக்கம் திருப்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பிரான்சின் ஏவியன்-லெ-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி7 உச்சிமாநாட்டின் இரவு விருந்தின் போது, "வடகொரியா விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது" என ட்ரம்ப் தன்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாக தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் வடகொரியா அண்மைகாலமாக நெருக்கமான இராணுவ உறவை வளர்த்து வருவதால், அதற்கு எதிராக தற்போது விதிக்கப்பட்டுள்ள சர்வதேசத் தடைகள் பயனற்றதாகிவிட்டன என்று சுட்டிக்காட்டிய லீ ஜே மியுங், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தை
கடந்த 2019ஆம் ஆண்டு ஹனோய் நகரில் டிரம்ப் - கிம் ஜாங் உன் இடையே நடைபெற்ற உச்சிமாநாடு தோல்வியில் முடிந்த பிறகு, வடகொரியா தன்னை ஒரு நிரந்தர அணுஆயுத நாடாக அறிவித்துக் கொண்டதுடன், அணு எரிபொருள் தயாரிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளது.

தற்போது ஈரான் உடனான பதற்றம் தணிந்துள்ள நிலையில், ட்ரம்ப் மீண்டும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், புதிய வெளியுறவுக் கொள்கையை வகுக்கவும் இந்த உச்சிமாநாட்டைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri