போர் மூளும் நிலை: தென் கொரியா மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல்
மஞ்சள் கடல் பகுதியில் தென் கொரிய இராணுவத்தை நோக்கி வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதல் இன்று (24.01.2024) காலை நடத்தப்பட்டதாக தென் கொரிய இராணுவத்தின் கூட்டுப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கப்பல்கள் மூலம் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஏவுகணை தாக்குதல்
இந்த தாக்குதலின் விவரங்கள் குறித்து தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறையினர் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வடகொரிய இராணுவத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய - உக்ரைன் யுத்தம், இஸ்ரேல் காசா மோதல் என உலகளாவிய ரீதியில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் தற்போது தென்கொரிய இராணுவம் மீது வடகொரியா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளமை அந்த பிராந்தியத்தில் மற்றுமொரு போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...