தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...
ஷிரான் பாசிக்கின் சோல்பீச் ஹோட்டலில் அமைக்கப்பட்ட ஓமான் ஹோல்டிங்ஸ் கூட்டு நிறுவனத்தின் கட்டடத்திற்காக தனது தந்தைக்கு மாதந்தோறும் 8 முதல் 8.5 இலட்சம் ரூபாய் வாடகை செலுத்தியுள்ளார்.
தனது சொந்தத் தந்தைக்கு எவ்வாறு ஒரு நபர் வாடகை செலுத்த முடியும்? என்ற பிரச்சினை எழுந்துள்ளது. இது பணச்சலவை நடவடிக்கையாகவே இடம்பெற்றுள்ளது என புலனாய்வு அதிகாரிகள் தெரிவிப்பதுடன் அது தொடர்பிலும் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
'சோல் பீச்' ஹோட்டல் கட்டட காணி
'சோல் பீச்' ஹோட்டல் தொடர்பான சாட்சியங்களை வழங்கிய போது இதை உடைத்து அகற்றியது தொடர்பாக கடந்த காலத்தில் பெரும் பேச்சுகள் எழுந்தன. அந்தப் பேச்சுகளுக்கு அப்பால் இதன் உரிமையாளர் யார் என்பது குறித்து ஷிரான் பாசிக் தனக்கு முன்னுரிமை கொடுத்துக் கூறியுள்ளார்.
ஹோட்டல் அமைந்துள்ள காணி தனது தந்தையிடமிருந்தே கிடைத்தது என்றும் தந்தைக்கு ஆனந்த என்பவரால் நன்கொடை உறுதிப்பத்திரம் மூலம் அது வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு கிடைத்த காணியிலேயே இந்த உணவகம் அமைக்கப்பட்டு ஒரு திட்டமாக செயற்படுத்தப்பட்டதாக அவர் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளில் வெளிவந்த பிரதான விடயம் என்னவெனில் இந்த நன்கொடை உறுதிப்பத்திரம் என்பது முற்றிலும் பொய்யான ஒன்றாகும்.

இது ஒரு போலி உறுதிப்பத்திரம் என தெரிவிக்கின்றன. மேலும் இந்தக் காணியின் உரிமை எந்தவொரு தனிநபருக்கும் உரியது அல்ல என்றும் இது பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரச காணியாகும.
'சோல் பீச்' ஹோட்டல் அமைந்துள்ள அதே வளாகத்திலேயே இந்த ஓமான் ஓல்டிங்ஸ் நிறுவனத்திற்குரிய கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான காணியை பலவந்தமாக ஆக்கிரமித்து இவ்வாறான கட்டடம் உயர்த்தப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலி நன்கொடை உறுதிப்பத்திரத்தைத் தயாரித்தமைக்காக ஷிரானின் தந்தை மற்றும் இதற்கு உதவிய சட்டத்தரணி ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர புலனாய்வு அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
பெறப்பட்ட சட்டவிரோத ஆவணங்கள்
அத்துடன் இதில் பல்வேறு நபர்கள் தொடர்புபட்டுள்ளதுடன் அவர்களின் தகவல்களும் வெளிவந்துள்ளன. மேலும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் இதற்காக எவ்வித முறையான அனுமதியும் பெறப்படவில்லை.
குறிப்பாக இந்த ஹோட்டல் தொடருந்து பாதைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அப்படியிருக்க பிரதான வீதியிலிருந்து தொடருந்து பாதையைக் கடந்து உணவகத்திற்குச் செல்வதற்காக இவர்கள் தொடருந்து திணைக்களத்திற்கு கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்.
இது பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலிருந்து உள்ள ஒரு சட்டமாகும் என புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர். அந்தச் சட்டத்தின்படி அதனை ஒரு அனுமதியாகக் கொண்டு உணவகத்திற்கு மின்சாரம் மற்றும் நீர் வசதிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஆனால் இவை அனைத்துமே போலி மற்றும் சட்டவிரோதமானவை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த உணவகத்திற்காகப் பெறப்பட்ட மதுபான உரிமங்கள் கூட முற்றிலும் சட்டவிரோதமானவை எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமான இந்த உணவகத்திற்கு வந்து சென்ற ஒரு முன்னாள் பிரதி அமைச்சர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகர அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சராகப் பணியாற்றிய காலத்திலேயே இந்த உணவக வளாகத்திற்கு வந்து சென்றுள்ளார். அவர் அங்கு வந்து சென்றமைக்கான புகைப்படங்கள் உணவகத்தில் இருந்து புலனாய்வு அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri