வெளிநாட்டிலுள்ள மனைவியிடம் பணம் கேட்டு கொடூர செயல் - கடுமையாக தாக்கப்பட்ட பிள்ளைகள்
கேகாலையில் பிள்ளைகளை துன்புறுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொட, பின்னவல பகுதியை சேர்ந்த 25 வயதான இளம் தந்தையே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 வயதான சிறுமி மற்றும் 7 வயதான சிறுவனை, சந்தேகநபர் மோசமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
கடுமையாக தாக்கப்பட்ட பிள்ளைகள்
வெளிநாட்டிலுள்ள மனைவிடம் பணம் கேட்டு, இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பணம் அனுப்பவில்லை என பிள்ளைகளை கொலை செய்யப் போவதாகவும் சந்தேக நபர் மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான பிள்ளைகள் மீட்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்காக பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.