கனடாவில் விழுந்து நொறுங்கிய விமானம்: 6 பேர் உயிரிழப்பு
கனடாவில் சிறிய பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விமான விபத்து இன்று (24.1.2024) கனடாவின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
சிறிய பயணிகள் விமானம்
கனடாவின் வடமேற்கு பகுதியில் உள்ள போர்ட் ஸ்மித் நகரில் இருந்து வடக்கு பகுதிக்கு சுரங்கத்துக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற சிறிய பயணிகள் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனை அடுத்து, மீட்புக்குழுவினர் தேடலில் ஈடுபட்ட போது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.
விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்இ விபத்து குறித்த விசாரணைகளை நடத்த கனடா போக்குவரத்து பாதுகாப்பு துறை குழு ஒன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
