மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து விட்டு யாழ்ப்பாணம் திரும்பிய தாயொருவர் விபத்தில் பலி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் ஒன்று கிளிநொச்சி பகுதியில் விபத்திற்குள்ளானதில் தாயொருவர் உயிரிழந்ததுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனனர்.
கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இன்று(24.01.2024) அதிகாலை நான்கு மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
தனது கணவரையும், மகனையும் வெளிநாடு செல்வதற்காக விமானத்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றுடன் மோதுண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
பேருந்தானது வீதியில் படுத்துறங்கிய மாடுகளுடன் மோதுண்டு எதிரே வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், பாசையூரைச் சேர்ந்த மார்க் வெஸ்லி அலன் கத்தரின் என்ற 3 பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதுடன், 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரில் ஐவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிசிச்சை பெற்று பெற்று வருகின்றனர்.
குறித்த விபத்தில் 9 வகையான எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன் நான்கு மாடுகள்
காயமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri