தமிழகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களைத் தாக்கியவர்கள் கைது!
இந்தியாவின் வடமாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (15.03.2023) முன்னெடுக்கப்பட்ட இந்த கைது நடவடிக்கையில் இந்துவாத கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் உட்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
தென் மாநிலத்திலுள்ள அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிமாநில தொழிலாளர்கள்
முன்னதாக தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட காணொளி வெளியிடப்பட்ட நிலையில், அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை
வெளியிட்டதாகக் கூறி, அரசியல்வாதி சீமானுக்கு எதிராகவும் காவல்துறை வழக்கைப் பதிவு
செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.