மெரிட் அடிப்படையில் பல்கலை நுழைவு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்! வடக்கு ஆளுநர்

Northern Province of Sri Lanka Education University Grants Commission Nagalingam Vedanayagam
By Rakesh May 03, 2026 02:02 PM GMT
Report

மெரிட்' அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

அனைத்துப் பரீட்சார்த்திகளிலிருந்தும் பல்கலைக்கழக நுழைவுச் சதவீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் பெற்றுள்ள முதலிடத்தைத் தக்கவைப்பதற்கு அப்பால், அந்த அடைவு மட்டத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்  எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநரின் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொல்பிட்டிய நீர்த்தேக்க அணையில் குதித்த நபர் சடலமாக மீட்பு

பொல்பிட்டிய நீர்த்தேக்க அணையில் குதித்த நபர் சடலமாக மீட்பு

முக்கிய விடயங்கள்

கூட்டத்தில் அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்வி, விளையாட்டு, பண்பாட்டுத் திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன.

மெரிட் அடிப்படையில் பல்கலை நுழைவு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்! வடக்கு ஆளுநர் | North Governer Speech In Jaffna

அத்துடன், மத்திய கல்வி அமைச்சின் ஊடாக வடக்கு மாகாணத்திலுள்ள தேசியப் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலவரங்களும் ஆராயப்பட்டன.

இக்கலந்துரையாடலில் ஆளுநரால் முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுப் பணிப்புரைகள் வழங்கப்பட்டன. 

இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்

இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்

ஆசிரியர் இடமாற்றக் கொள்கை

மாகாணம் முழுவதுமான ஆளணிப் பரம்பலைச் சீராக்கும் நோக்கில் புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றக் கொள்கை தொடர்பில் ஆளுநர் விசேட கவனம் செலுத்தினார்.

இக்கொள்கை தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் விரைவில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அடுத்த ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றங்களைப் புதிய கொள்கையின் ஊடாகவே நடைமுறைப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.

மெரிட் அடிப்படையில் பல்கலை நுழைவு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்! வடக்கு ஆளுநர் | North Governer Speech In Jaffna

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கும் வரை அவர்களது தனிப்பட்ட கோவைகளை இற்றைப்படுத்தாது நிலுவையில் வைத்திருக்கக் கூடாது எனவும், அவற்றை உரிய காலத்தில் இற்றைப்படுத்தி ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

அதேவேளை, நிலுவையில் உள்ள விசாரணைகள் காரணமாக எவருக்கும் ஓய்வூதியம் தாமதமாகும் நிலை ஏற்படக்கூடாது எனவும், விசாரணைகளைத் துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் எனவும் ஆளுநர் திட்டவட்டமாகப் பணிப்புரை விடுத்தார்.

தவணைப் பரீட்சை

உயர்தர மாணவர்களுக்கான பாடப்பரப்புக்கள் உரிய காலத்தில் பூர்த்தி செய்யப்படாமை பெரும் பின்னடைவாக உள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மெரிட் அடிப்படையில் பல்கலை நுழைவு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்! வடக்கு ஆளுநர் | North Governer Speech In Jaffna

இதனை ஒழுங்குபடுத்துவதுடன், இறுதிக்கட்டத் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகளுடன் மாணவர்களுக்கான 'இசட்' புள்ளியையும் கணிப்பிட்டு வெளியிடுவதன் ஊடாக அடைவு மட்டத்தை அதிகரிக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

இதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர் கல்வி அதிகாரிகளைப் பணித்தார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு - பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு - பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US