வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபாய் பணமோசடி - செய்திகளின் தொகுப்பு (Video)
வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான தனியார் நிறுவனம் ஒன்றினை நடத்தி வரும் ஒருவர் கிளிநொச்சி, பூநகரி பகுதியைச் சேர்ந்த நபரிடம் கடந்த 2021ஆம் ஆண்டு 12 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளார்.
இதனை தொடர்ந்து கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமும் வெளிநாடு அனுப்புவதாக தெரிவித்து 30 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.
வெளிநாடு அனுப்புவதாக குறித்த இருவரிடமும் பணத்தைப் பெற்ற போதும் அவர்கள் இருவரையும் வெளிநாடு அனுப்பாது, பணத்தையும் வழங்காது குறித்த நபர் ஏமாற்றி வந்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 14 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
