மலையக மக்களை சிதைக்க பெரும் முயற்சி: அருட்தந்தை மா.சத்திவேல் குற்றச்சாடட்டு

Jaffna Anura Kumara Dissanayaka Central Province Weather
By Shan Dec 12, 2025 12:52 PM GMT
Report

மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம். மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று (05.12.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கில் வெள்ள நிவாரணம் வழங்க மறுத்த கிராம சேவகர்! முறைபாட்டிற்கு பின்னர் குடும்பங்களுக்கு நிவாரணம்..

வடக்கில் வெள்ள நிவாரணம் வழங்க மறுத்த கிராம சேவகர்! முறைபாட்டிற்கு பின்னர் குடும்பங்களுக்கு நிவாரணம்..


நிர்க்கதியாகியுள்ள மலையக மக்கள்

"எல்லா கோயில் காணிகளிலும், எல்லா சிதம்பரத்து காணிகளிலும், எல்லா தர்ம காணிகளிலும் மலையக மக்களை குடியேற்றி அவர்களை காப்பாற்ற வேண்டும். அவர்கள் இங்கு வந்தால் விவசாயத்தில் செழிப்பாகும்" என இயற்கை பேரிடருக்கு முகம் கொடுத்து நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மலையக மக்கள் குறித்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

மலையக மக்களை சிதைக்க பெரும் முயற்சி: அருட்தந்தை மா.சத்திவேல் குற்றச்சாடட்டு | North Eastern Highlands Let Reverend Satthivel

சிவ பூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி. ஆறு. திருமுகம் திருமுருகன் அவர்கள். ஐயாவின் உணர்வு பூர்வமான உளவெளிபாட்டுக்கு மலையக சமூக ஆய்வு மையம் நன்றி கூறுகின்றது. இவ்வாறான உணர்வுபூர்வமான கருத்தினை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் வெளிப்படுத்தி இருந்தார்.

மலையக மக்களின் நிலையினை இன சுத்திகரிப்பு மற்றும் இன அழிப்பிற்கு உள்ளாகி வரும் மக்களின் நீண்டகால பாதுகாப்பு கருதி அரசியல் அறவியலில் நின்று கூட்டாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே எமது கருத்து நிலைப்பாடு.

மலையக மக்களும் 1948க்கு பின்னர் திட்டமிட்ட இன அழிப்பிற்க்கும், இன சுத்திகரிப்பிற்கும் உள்ளாகி நாளாந்தம் சிதைவுகளையே சந்தித்தவரும் ஒரு தேசிய இனமாகும்.

மலையக மக்களை சிதைக்க முயற்சி

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க அவர்கள் மலையகத்தில் வீடற்றிருக்கும் 1,50,000 பேருக்கு கொடுப்பதற்கு போதுமான காணி மலையகத்தில் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறத் தொடங்கி இருக்கின்றார்.

இது அவர்களின் நீண்ட கால அரசியல் சித்தாந்தம். அதுவே சிங்கள பௌத்த கருத்தியலுமாகும். தற்போது அவர்கள் பேரிடர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மலையக மக்களை சிதைக்க முயல்வதை இன அழிப்பிற்கும் இன படுகொலைக்கு முகம்கொடுக்கும் சமூகமாக அதனை தடுத்து நிறுத்துவதற்கும். அவர்களின் எதிர்கால அரசியல் பாதுகாப்பினையும் கருதி கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் வேண்டும்.

மலையக மக்களை சிதைக்க பெரும் முயற்சி: அருட்தந்தை மா.சத்திவேல் குற்றச்சாடட்டு | North Eastern Highlands Let Reverend Satthivel 

மலையக மக்கள் நாட்டின் சனத்தொகையில் இரண்டாம் இடத்தில் இருந்த போது அவர்களின் அரசியல் எழுச்சிக்கு பயந்து 1948 ஆம் சமூகத்தின் வாக்குகளை பறித்ததோடு மட்டும் நின்று விடாது இந்தியாவின் அயல் நாடுகளுடன் அரசியல் உறவில் ஏற்பட்டிருந்த விரிசலை தனக்கு அதனை சாதகமாக்கி 1964 ல் பல லட்சம் மலையகத்தவர்களை நாட்டை விட்டே வெளியேற்றும் ஒப்பந்தத்தை (சிரிமா-சாஸ்திரி) சிறிமாவோ பண்டாரநாயக்கா மேற்கொண்டார். இது இரு நாடுகளும் இணைந்து நடாத்திய முதலாவது இனப்படுகொலை என்றே அடையாளப்படுத்தல்.

அதே சிறிமாவோ பண்டார நாயக்க தமது 1970- 77 ஆட்சி காலகட்டத்தில் தோட்டங்களை அரசுடைமையாக்குவதாக கூறி சிங்களமயமாக்கி பல தோட்டங்களில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி; உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து சிங்கள காடையர்களைக் கொண்டு அடித்து துரத்த இடமளித்த வரலாறும் உண்டு.

மேலும் நாட்டின் பொருளாதார சீர்திருத்த செயல் திட்டத்தினை முன்னெடுத்து மலையத்தவர்களை பட்டிணி சாவிற்குள் தள்ளி கொலை செய்ததையும் மறக்க முடியாது.

இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் உயிர் பாதுகாப்பு தேடி சுயமாகவும், காந்திய வழிகாட்டலோடும் வடக்கு மற்றும் கிழக்கு சென்று குடியேறினர். இதனையே சிங்கள பௌத்தமும் விரும்பியது.

கடலில் காற்று சுழற்சிகள் உருவாகும் வாய்ப்பு! அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கடலில் காற்று சுழற்சிகள் உருவாகும் வாய்ப்பு! அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்


திட்டமிட்ட இனவாத செயல்

அடுத்து வந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் திறந்த பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி எனும் பேரில் மலையகத்தவர் வாழுமிடங்கள் சூறையாடப்பட்டு  அவ்விடங்களில் இருந்து மலையக மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் காலத்தில் நடந்த திட்டமிட்ட இனவாத செயலின் காரணமாக பாதிக்கப்பட்டோர் வடக்கு கிழக்கிற்கும், இந்தியாவிற்கும் சென்றனர்.

மலையகத்தை அபிவிருத்தி திட்டத்திற்குள் கொண்டுவராது, பெருந்தோட்டத் தொழிலுக்கு அப்பால் தொழில் வாய்ப்பினை உருவாக்காது, கல்வி, சுகாதாரத் துறைகளை மேம்படுத்தாது கைவிட்டதால் ஆயிரக்கணக்கானோர் மலையகத்தை விட்டு தற்காலிகமாகவும் , நிரந்தரமாகவும் தினமும் வெளியேறி வருகின்றனர்.

இதிலே மௌன மகிழ்வு காண்பது சிங்கள பௌத்த பேரினவாதமே. அதுமட்டுமல்ல கடந்த காலங்களில் மலையக மக்களுக்கு காணி கொடுப்பதாக கூறிய எந்த பேரினவாத ஆட்சியாளர்களும் அதனை கொடுப்பதற்கு துணியவில்லை. அரசியலுக்காக வீடுகளைக் கட்டி சலுகை மாயைக்குள் அவர்களை தள்ளி தேர்தல் அரசியலையே முன்னெடுத்தனர்.

மலையக மக்களை சிதைக்க பெரும் முயற்சி: அருட்தந்தை மா.சத்திவேல் குற்றச்சாடட்டு | North Eastern Highlands Let Reverend Satthivel

வீட்டுக்குரிய உரிமை முழுமையாக இதுவரை கொடுக்காது இருப்பதும் காணி உரிமை நிரந்தரமாக அவர்களுக்கு கிடைக்கக் கூடாது எனும் மனநிலையிலாகும்.

மலையக மக்கள் தமக்கே உரிய இன அடையாளங்களை பாதுகாப்பு தேசிய இனமாக வளர்ந்து நிற்கும் சூழ்நிலையில் அவர்கள் தங்களது கடும் உழைப்பாலும் உயிர்த்தியாகத்தாலும் உருவாக்கிய மலையகம் எனும் தேசத்தில் வாழ்வதே அவர்களுக்கான அரசியல் பாதுகாப்பாகும்.

தற்போது நிகழ்ந்திருக்கும் இயற்கை பேரிடர் இக்கட்டான சூழலை பயன்படுத்தி மலையக மக்களின் நில உரிமையை தட்டி பறிக்கும் செயல்பாட்டுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எவரும் துணை போகக்கூடாது.

தொடர்ந்து ஒடுக்கப்படும் தமிழர்கள்

நாட்டில் வடகிழக்கு தமிழர்களும், மலையகத் தமிழர்களும் இந்துக்கள் அல்லது சைவர்கள் என்பதற்காக இதுவரை ஒடுக்கப்படவுமில்லை படுகொலை செய்யப்பட்டவுமில்லை.

தமிழர்கள் என்பதற்காகவே நாம் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றோம். அழிக்கப்படுகின்றோம்.நில பறிப்பிற்கு உள்ளாகின்றோம். இதற்கு எதிராக கூட்டு அரசியல் செயல்பாடு என்பது அவரவர் நிலத்தில் அவரவரது அடையாளங்களோடு அரசியல் கௌரவத்தோடு வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதாகும்.

இயற்கை அனர்த்தத்தை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் மலையக மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துக்கு எடுக்கும் முயற்சிக்கு எந்த வகையிலும் எவரும் இடமளிக்காது இருப்பதோடு அவர்களின் அரசியல் பாதுகாப்பு மிகு எதிர்காலம் கருதி மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு,கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம்.

மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மண்சரிவு அபாயம்: இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆய்வுகள் ஆரம்பம்

இலங்கையில் மண்சரிவு அபாயம்: இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆய்வுகள் ஆரம்பம்

அடுத்த 36 மணி நேரத்தில்! காலநிலை தொடர்பான முக்கிய அறிவிப்பு-வெளியான எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில்! காலநிலை தொடர்பான முக்கிய அறிவிப்பு-வெளியான எச்சரிக்கை


மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US