சர்வதேச நீதி கோரிய போராட்டத்திற்கு ஆதரவாக ஊர்தி பவனி
சர்வதேச நீதி கோரி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக ஊர்திப் பவனியொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நாளை சனிக்கிழமை வடக்கு கிழக்கு காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கிலும் கிழக்கிலும் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கபடவுள்ளது.
வடக்கில் யாழ்ப்பாணம் செம்மணியில் இப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப் போராட்டத்திற்கு ஆதரவைத் திரட்டும் வகையில் யாழிலிருந்து ஊர்திப் பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழாராச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தி அங்கிருந்து இந்த ஊர்திப் பவனி ஆரம்பமாகியது.
இவ்ஊர்திப் பவனியொன்று இன்று பல்வேறு இடங்களிற்கும் சென்று நாளை காலை போராட்டம் நடைபெறும் செம்மணியை வந்தடைந்து நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப் போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அனைவரும் அணிதிரள வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.







1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 22 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri