இனப்படுகொலைக்கு நீதிகோரி முல்லையில் கையெழுத்து போராட்டம்
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்க மாகாணங்களின் பலபகுதிகளிலும் இடம்பெற்றுவருகின்றது.
அந்தவகையில் குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு முல்லைத்தீவு நகரில் நேற்று(29.08.2025) கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.ஜுட்சன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தக் கையெழுத்திடும் செயற்பாட்டில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தபிசாளர் சி.லோகேஸ்வரன், முன்னாள் கரைதுறைப்பற்று தபிசாளர் க.விஜிந்தன், மாந்தை கிழக்கு உபதபிசாளர் வரதன் பிரதேச சபை உறுப்பினர்களான அமலன், பவுள்ராஜ், குணம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், கட்சி உறுப்பினர்கள், பங்குத்தந்தையர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.






1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 22 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri