சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணி (video)
எதிர்வரும் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் தமிழர் தாயக பகுதியில் பாரிய அளவிலான பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தின் வவுனியா மாவட்ட செயலாளர் சிவானந்தன் ஜெனிதா தெரிவித்துள்ளார்.
நேற்று (07.12.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களும் பாரிய அளவிலான பேரணியொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணி
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் ஆரம்பிக்கப்படும் பேரணியானது காந்தி பூங்காவைச் சென்றடையவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களும் ஒன்றுசேர்ந்து முன்னெடுக்கவுள்ள இந்த பேரணியானது வவுனியா கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு பஜார் வீதியூடாக இலுப்பையடிக்கு சென்று தொடர்ந்து ஏ - 9 வீதியூடாக பழைய பஸ் நிலையத்தை வந்தடையவுள்ளது.
மதகுருமார்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவினர்கள், பல்கலைகழக மாணவர்கள், இளைஞர்கள், அரச சார்பற்ற
நிறுவனங்களின் பிரதிநிதிகள், தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கத்தினர்,
வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும்
அரசியல் தலைவர்கள் என எல்லோரையும் இந்தப் பேரணியில்
கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
