ஜே.வி.பிக்கு ஆதரவு வழங்க தயாராகும் வடக்கு - கிழக்கு வேட்பாளர்கள்
வடக்கு கிழக்கில் ஒருசில வேட்பாளர்கள் தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியுடன் ஜே.வி.பிக்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தனது பிரசாரப்பணிகளை ஆரம்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று(18.10.2024) சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஜனநாயக தேசியக் கூட்டணி
“ஜனநாயக தேசியக் கூட்டணி மட்டக்களப்பு மாவட்டத்திலே ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்று அதிக ஆசனங்களை கைப்பற்றும்.
தமிழ்த்தேசியத்திற்கும்
எங்களுடைய மக்களின் அபிவிருத்திக்கும் கட்சிக்கு அதிகளவான வாக்குகள் கிடைப்பதற்கு மாமாங்கேஸ்வரர் உறுதுணையாக
இருப்பார் என்ற நம்பிக்கையோடு பிரசாரத்தை தொடங்க இருக்கின்றோம்.
மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அந்த ஆட்சி மாற்றத்தின்பால் தெற்கிலே மக்கள் அணிதிரளத் தொடங்கியிருக்கின்றார்கள்.
தேசியத்திற்கான அணி
வடக்கிலே தமிழ்த் தேசியத்திற்காக அணிதிரள இருக்கின்றார்கள். மாற்றம் ஒன்று இந்த நாட்டிற்குத் தேவையென தெற்கிலே உள்ள மக்கள் விரும்பியிருக்கின்றார்கள்.
அதுபோன்று வடக்கு கிழக்கிலே உள்ள மக்களுக்கும் ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தின் அடிப்படையில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் சங்குச் சின்னத்திற்கு வடக்குகிழக்குத் தமிழ் மக்கள் அமோகமான ஆதரவை வழங்கி மாற்றம் ஒன்றை உருவாக்குவதற்குத் தயாராக இருக்கின்றார்கள்’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
