ஊடகங்களை அடக்கவே நிகழ்நிலை காப்பு சட்டம்: காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் விசனம்
இலங்கை அரசாங்கமானது ஊடகங்களை அடக்கவே நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றி உள்ளது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி ஆனந்த நடராசா குற்றஞ்சாட்டி உள்ளார்.
யாழ். கொடிகாமத்தில் இன்று (01.2.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நிகழ்நிலை காப்பு சட்டம்
நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாதச் சட்டம் ஆகிய இரண்டும் இன்று பேசு பொருளாகும். சுயமாக போராடும் இனத்தின் மீது கொண்டுவரப்பட்ட சட்டம் பயங்கரவாத தடைச் சட்டம்.
எமது போராட்டங்கள், எமது மக்களின் பிரச்சினைகளை வெளியுலகிற்கு கொண்டு செல்லும் ஊடகங்களை அடக்கவே நிகழ்நிலை காப்பு சட்டம் கொண்டுவரப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு எதிராக பாரிய போராட்டத்தை முன்னெடுத்தார். அதன் போது கூட அடக்குமுறை பாவிக்கப்பட்டுள்ளது.
பாரிய போராட்டம்
அவர்களுக்கே அப்படி என்றால் எங்கள் நிலை? சிங்கள தலைவர்கள் தாங்கள் ஆட்சியில் உள்ள போது ஒரு மாதிரியாகவும், இல்லாத போது இன்னொரு மாதிரியாகவும் செயல்படுகிறார்கள்.
இதுவரை காலமும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரே போராட்டங்களை முன்னெடுத்து வந்தோம். எங்களுக்கும் வயது முதிர்ந்துள்ளது.
ஆகவே பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறை இந்த போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
