பேருந்து கட்டணத்தை உயர்த்த முடியாது: போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு
புதிய இணைப்பு
டீசல் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உடன்படிக்கை
டீசலின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து கட்டணம் தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் பிரகாரம் தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்த முடியாது எனவும் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டுமாயின் உடன்படிக்கைகளின் பிரகாரமே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாம் இணைப்பு
எதிர்வரும் இரண்டு வாரங்களில் பேருந்து கட்டணம் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து இன்று (01.2.2024) அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோரிக்கைகளுக்கு தீர்வு
தனியார் பேருந்து சங்கங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், கட்டாயமாக இரண்டு வாரங்களுக்குள் கட்டணங்கள் உயர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 35 ரூபாயாக இருக்கும் என்றும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
